அதிகாலை நேரத்தில் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, தேவதூதர் வந்து எனக்கு ஒன்றைக்காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்.
நான் கிராமப்புறத்தில் ஒரு சாலையில் தேவதூதருடன் நடந்து கொண்டிருந்தேன். என் இடதுபுறம், தோளுக்குக் கீழே, ஆச்சரியப்படும் விதமாக ஒரு நெருப்பு ஜுவாலையைக் கவனித்தேன். அது உங்களைக்K கொளுத்தும் நெருப்பல்ல. நாங்கள் நடந்தபோது அதுவும் எங்களுடன் நகர்ந்து வந்தது. தேவதூதர் என் வலதுபுறத்தில் இருந்தார்.
நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான் அந்த ஜுவாலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 'நான் இதற்கு முன் ஒரு உயிர் உள்ள ஜுவாலையுடன் பக்கவாட்டில் நடந்ததில்லை' என்று நினைத்தேன்.
அந்த ஜுவாலை திடீரென்று பேசியபோது நான் ஆச்சரியப்பட்டேன். அவர் சொன்னார், "நான் உனக்குக் கொடுக்கும் அனைத்துப் போதனைகளையும் மற்றும் புனித வார்த்தைகளையும் நீ மக்களுக்குப் பரப்ப வேண்டும், அவர்களிடம் பேச வேண்டும், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். நான் உன்னிடம் சொல்லும் அனைத்தையும் எழுதி வை. நீ அப்படிச் செய்யாவிட்டால், ஒரு நாள் இதற்காக நீ தண்டிக்கப்படுவாய்."
பிறகு என் அருகில் நகர்ந்து வந்த அந்த ஜுவாலை தூய ஆவி என்பதை உணர்ந்தேன். தூய ஆவி பிதாவாகிய கடவுளிடமிருந்து வருகிறார் மற்றும் எனக்கு நெருப்பு ஜுவாலையாக வெளிப்பட்டார்.
இதை நான் என் தோழியிடம் சொன்னபோது, அவள் என்னிடம், “ஆனால் நீ உடல் ரீதியாக இவ்வளவு சிரமப்படுகிறாயே” என்றாள்.
நான் பதிலளித்தேன், “அந்தப் பாடு ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக, ஆனால் நான் செய்திகளையும் பரப்ப வேண்டும் மற்றும் மக்களிடம் பேசவும் வேண்டும். என்னிடம் கேட்கப்பட்டது நான் செய்யாவிட்டால், நான் நேரடியாகத் தண்டிக்கப்படுவேன், ஏனெனில் கடவுள் எனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்துள்ளார். தண்டிக்கப்படுவது என்றால், நம் ஆண்டவர் 'நீ செய்திகளை அலட்சியப்படுத்துகிறாய்' என்று சொல்வார் என்று அர்த்தம்.”
நமது மனசாட்சியை நாம் காணும்போது அதுவும் அதே அனுபவமாக இருக்கும். அது உங்களுக்கு வலதுபுறத்தில் ஒரு நெருப்பு ஜுவாலையாகத் தோன்றும், அது கடவுளின் பிரசன்னமான பரிசுத்த ஆவியாகும். நீங்கள் உண்மையை உங்கள் முன்னால் காண்பீர்கள். இதை நான் முன்பே அனுபவித்தேன்.
சில நேரங்களில் நம் ஆண்டவருடனான சிறிய அனுபவங்களை, ‘இவை மிகக் குறுகியவை என்பதால் இவற்றை எழுதி வைப்பது அவ்வளவு முக்கியமல்ல’ என்று நினைத்து நான் புறக்கணித்திருக்கலாம். ஆனால் இப்போது அது மிகவும் முக்கியம் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் அது அவருடைய பரிசுத்த வார்த்தை என்று எனக்குத் தெரியும்!
அதன்பிறகு, நான் உண்மையிலேயே குற்ற உணர்ச்சியடைகிறேன். நான் அந்தத் தூதரிடம், “ஓ என் ஆண்டவரே, இதற்காக நான் தண்டிக்கப்படுவேன்” என்று சொன்னேன்.
எனது துணையான அந்தத் தூதர் பதிலளித்தார், “ஆம், கடவுளின் பரிசுத்த வார்த்தையை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். கடவுள் உங்களிடம் சொல்லும் அனைத்தையும் எழுதி வையுங்கள். ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் விலைமதிப்பற்றது மற்றும் புனிதமானது, நீங்கள் அப்படிச் செய்யாவிட்டால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். மக்களுக்கு அந்த வார்த்தையைப் பறைசாற்றுங்கள். எனவே, இதைத் தீவிரமாகக் கொள்ளுங்கள்.”
நான் தூதரிடம் சொன்னேன், “மக்கள் சில நேரங்களில் என்னையும் விண்ணுலகிலிருந்து நான் பெறும் செய்திகளையும் கேலி செய்கிறார்கள்.”
“அவர்களைச் செய்ய விடுங்கள்,” என்று அவர் கூறினார். “இது கடவுளிடமிருந்து வந்த உண்மையான பரிசுத்த வார்த்தை. இது அவரிடமிருந்தே வருகிறது. நீங்கள் பரிசுத்த வார்த்தையையும், போதனைகளையும் மக்களுக்குப் பரப்புங்கள், பிறகு அதை அப்படியே விட்டுவிடுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொள்வார்கள். இல்லையெனில், அது அவர்களுக்குக் கெடுதல். அதற்காக அவர்கள் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.”
மக்கள் அவருடைய செய்திகளை எவ்வாறு பெறுகிறார்கள் என்பது குறித்து நம் ஆண்டவர் என்னிடம் பலமுறை கூறியது எனக்கு நினைவிருக்கிறது, “எனது செய்திகளை ஒரு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.”